இறந்த தாயின் பிணத்தை மரப்பலகையில் கட்டி எடுத்து சென்ற மகன்கள்!

இறந்த தாயின் உடலை மரப்பலகையில் கட்டி இருசக்கர வாகனத்தில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்திற்கு அவரது மகன்கள் எடுத்துச் சென்ற சம்பவம்

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்த சோகச் சம்பவம் பதிவாகியுள்ளது.

அனுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெய்மந்திரி யாதவ் என்பவர் நெஞ்சுவலி காரணமாக ஷஹதோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இறந்த தாயின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அம்புலன்ஸ் வசதியை மருத்துவமனை நிர்வாகம் செய்து தரவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இறந்த தாயினை மரப்பலகையில் கட்டி சுமந்து இரு மகன்களும் சென்றுள்ளனர்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்