செம்மணி புதைகுழியில் உயிரை உலுக்கும் காட்சி,கால் மடித்து அமர்ந்த நிலையில் எலும்புக்கூடு மீட்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் ஒரு மனித என்புக்கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு உட்கார்ந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

அகழ்வு பணிகளின் போது குவியலாக எட்டு மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

புதைகுழியில் இருந்து புதிதாக 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் நேற்று 44 ஆவது நாளாக அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை நேற்று வரை 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் இன்று சனிக்கிழமையுடன் அகழ்வு பணிகள் நிறைவுறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

சிறப்புச் செய்திகள்