ஷரத் பூர்ணிமா வழிபாடு!

ஆயுத பூஜை, விஜயதசமி முடிந்து வரக்கூடிய இந்த புரட்டாசி மாத பௌர்ணமி திதியை தான் ஷரத் பூர்ணிமா என்று சொல்லுகிறார்கள்.

பெரும்பாலும் இந்த வழிபாடு நம்முடைய நாட்டில் கிடையாது. எனினும் இந்தியாவின் வடமாநிலத்தவர்கள் இந்த நாளை மிகவும் விசேடமாக கொண்டாடுகிறார்கள்.

ஈசனுக்காக சிவராத்திரி அன்று கண் விழித்து வழிபாடு செய்கின்றோம். அதேபோல மகாலட்சுமியின் அருளாசியை பெற வேண்டும் என்பதற்காக கண்விழித்து வழிபாடு செய்யக்கூடிய ராத்திரிதான் இந்த ஷரத் பூர்ணிமா வழிபாடு.

பௌர்ணமியை தான் பூர்ணிமா என்று சொல்கிறார்கள்.

இந்த ஷரத் பௌர்ணமி எந்த நாளில் வருகிறது. எந்த நேரத்தில் வீட்டில் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும்.

நமது நாட்காட்டியில் அக்டோபர் 17 ஆம் திகதி தான் பௌர்ணமி திதியானது குறிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 16 ஆம் திகதி புதன்கிழமை இரவே இந்த பௌர்ணமி திதி பிறந்து விடுவதால், இன்றிரவு இரவு 9 மணிக்கு மேல் நம்முடைய வீட்டில் இந்த மகாலட்சுமி பூஜையை துவங்கலாம்.

இரவு 9:00 மணிக்கு மேலாக உங்கள் வீட்டு பூஜை அறையை அலங்காரம் செய்து, முடிந்தால் ஒரே ஒரு தாமரை பூவை வாங்கி மகாலட்சுமி தாயாருக்கு முன்பு வைத்து, மகாலட்சுமிக்கு ஒரு விளக்கு ஏற்றி, ஒரு பிரசாதம் நெய்வேத்தியமாக வைத்து வழிபடலாம்.

இவ்வாறு வழிபட்டால் உங்களுடைய வறுமை அன்றோடு உங்களை விட்டு முழுமையாக நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

சிறப்புச் செய்திகள்