தொடர் சிகிச்சையில் ஷாலினி.

தனது மகன் ஆத்விக் தனது நெற்றியில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ஷாலினி மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் அவரை பத்திரமாக பார்த்து வருவதாக கூறுகின்றனர்.

நடிகை ஷாலினி விரைவில் பூரண குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

நடிகை ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கில் அஜித் இருந்தார் .

படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அஜித் சென்னைக்கு வரமாட்டார் என தகவல்கள் வெளியான நிலையில், அன்றைய தினத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த நாள் காலையிலேயே அஜித் சென்னைக்கு வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது மனைவியை பார்த்து ஆறுதல் சொன்னார்.

அந்த போட்டோ வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆனந்தக் கண்ணீர் விடச் செய்தது.

மேலும், நடிகை ஷாலினிக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சை குறித்த தகவல்கள் வெளியே கசியவில்லை. ஆனால், முக்கியமான அறுவை சிகிச்சை தான் என்று கூறுகின்றனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஷாலினி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை உணர்ச்சி வசப்பட வைத்திருக்கிறது.

சிறப்புச் செய்திகள்