செவ்வந்தியின் கைது நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், சந்தேகநபர்களின் கைது பின்னணி வெளியானவிதம் தற்போது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கைது நடவடிக்கையின் போது யார் கைது செய்யப்பட்டார்கள்,எப்படி கைது செய்யப்பட்டார்கள், கைதின் போது நடந்த தோற்றப்பாடுகள் கைது செய்தவர்கள் இலங்கைக்கு அழைத்து வந்த பின்னர்தான் அரசத்தரப்போ அல்லது பொலிஸ் தரப்போ வெளியிட வேண்டும்.
எனினும் செவ்வந்தியின் கைது விடயத்தில் அதற்கு முன்னரே இந்த விடயங்கள் வெளிப்பட்டமையானது பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
செவ்வந்தியின் கைது விடயமானது பிரபல அரசியல்வாதியொருவரால் ஊடகங்களுக்கு கசிந்தமையானது குற்றவியல் அதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Views: 374





