யாழ் வருகை தந்த சரிகமப பாடகர்கள்!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றுவதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமப பாடகர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இன்று நடைபெறவுள்ள இசைநிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இவர்கள் நேற்றைய தினம் (02.08.2025) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

ஜீ தமிழ் தொகுப்பாளினி அர்ச்சனாவுடன் “சரிகமப லிட்டில் சாம்ஸ்” பாடகர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியானது இன்று (03.08.2025) மாலை யாழ்ப்பாணம் – அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சரிகமப லிட்டில் சாம்ஸ் பாடகர்களான திவினேஸ், புவனேஸ் உள்ளிட்ட பல பாடகர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்