நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை,சபையில் சஜித் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், இது ஒரு தீவிர பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று(24.10.2025) நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர், வெலிகம பிரதேச சபை தவிசாளர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படாததால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்