நாளுக்கு நாள் உயரும் துவிச்சக்கர வண்டி விலை

நாட்டில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக துவிச்சக்கர வண்டிகளின் விலை100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துவிச்சக்கர வண்டி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடியால் சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளதால், இருப்பு தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வியாபாரிகள் துவிச்சக்கர வண்டிகளை நாளுக்கு நாள் வெவ்வேறு விலையில் விற்பனை செய்வதாகவும், குறிப்பாக சாதாரண சைக்கிள் விலையை 60,000 ஆகவும், கியர் பைக்கின் விலை 77,000 ஆகவும் உயர்த்தியுள்ளனர்.

சந்தைகளில் துவிச்சக்கர வண்டிகளில் கையிருப்பு தீர்ந்துள்ளமையினால் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புவோர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

துவிச்சக்கர வண்டி உதிரிப் பாகங்கள் ஆடம்பரப் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றமையும் அவற்றிற்கு 55% வரி விதிக்கப்பட்டமையும் துவிச்சக்கர வண்டிகளின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்