ரணில் பதவி விலக வேண்டும். தம்மிக்க பெரேரா

ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என அமைச்சரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டம் எதுவும் நிதியமைச்சர் என்ற வகையில் ரணில் விக்கிரமசிங்கவிடம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உருவாகி வரும் நெருக்கடியின் சகல பகுதிகளும் டொலர் நெருக்கடியுடன் இணைந்திருப்பதால், நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத நிதியமைச்சர் நாட்டில் இருப்பது ஆபத்தான நிலை என தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக இருந்து நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கு டொலர்களை பெற்றுக்கொடுப்பதற்காக ஏனைய துறைகளினால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களையும் தெரிந்தோ தெரியாமலோ நிதியமைச்சர் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றார் என குற்றம் சுமத்திய அமைச்சர் தம்மிக்க பெரேரே ரணில் விக்கிரமசிங்கவை நிதி அமைச்சர் பதவியில் இருந்து விலகும்படியும் வலியுறுத்தினார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்