தற்காலிக ஜனாதிபதியாக ரணில்..

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 ஆம் திகதியிடப்பட்ட தனது பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையொப்பமிட்டதாகவும், அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் ஏற்பாட்டில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் என்றும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்