Q+ செயலி ஊடாக சில்லறை விற்பனையாளர்கள் சாதனை படைப்பு

LANKAQR தளம் மூலமான Q+ கொடுப்பனவு செயலியூடான கொடுப்பனவுகளுக்கு வழங்கப்பட்ட விலைக்கழிவுகள் மற்றும் பண மீளளிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள் மூலமாக மூன்று முன்னணி ஃபஷன் சில்லறை விற்பனையாளர்கள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மூன்றே வாரங்களில் 23 மில்லியன் ரூபாய்க்கு மேலான மொத்த விற்பனைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

´நாடு முழுவதும் LANKAQR´ என்ற தொனிப்பொருளில் LANKAQR தளம் மூலமாக பணமற்ற எண்மிய கொடுப்பனவுகளை ஊக்குவிக்கவும் ஸ்கேன் செய்து கொடுப்பனவு செய்யும் பரிமாற்றங்களைப் பிரபல்யப்படுத்தவும் இலங்கை மத்திய வங்கியின் LANKAQR தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு ஆதரவளிக்க இலங்கை கொமர்ஷல் வங்கி இந்த பிரசார நடவடிக்கைகளை நடத்தியது.

குறிப்பாக கொமர்ஷல் வங்கியே நாடளாவியரீதியில் இந்த வகையான மூன்று நிகழ்ச்சித் திட்டங்களை இரண்டு மாதங்களுக்கிடையிலான காலப்பகுதியில் ஒழுங்குபடுத்திய நாட்டிலுள்ள ஒரேயொரு வங்கியாகும். இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் ஹவுஸ் ஒஃப் ஃபஷன்ஸ் ஃபஷன் பக் மற்றும் கூல் பிளனட் விற்பனை நிலையங்களின் கூட்டிணைவோடு ஆரம்பிக்கப்பட்டதோடு LANKAQR இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட QR அடிப்படையிலான முதலாவது கொடுப்பனவு செயலியான Q+ கொடுப்பனவு செயலி மூலமாக தங்கள் கொள்வனவுகளுக்கு செலுத்தும்போதும் விற்பனையாளரின் QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும்போதும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கு பண மீளளிப்பு மற்றும் 25% விலைக்கழிவுகளைப் பெற்று மகிழ்ந்திட அழைப்பு விடுக்கப்பட்டது. LANKAQR செயற்படக்கூடிய எந்தவொரு செயலியூடாகவும் இந்த விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் ஸ்கான் செய்து கொடுப்பனவுகளை மேற்கொள்ளலாம்.

மொத்தமாக 3,200 க்கும் அதிகமான LANKAQR ஸ்கேன் கொடுப்பனவுகள் இந்த நிகழ்ச்சித் திட்டக் காலத்தில் இடம்பெற்றிருப்பதானது Q+ கொடுப்பனவு செயலி மற்றும் LANKAQR தளம் ஆகியன தமது தேவைக்கான பாதுகாப்பான இலகுவான மற்றும் விரைவான கொடுப்பனவு முறை என்பதை வாடிக்கையாளரும் வர்த்தகர்களும் ஏற்றுக்கொண்டிருப்பதற்கான நற்சான்று என வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சித்திட்டங்கள் தங்கள் அபிமான ஆடையகங்களில் விலைக்கழிவுகளைப் பெற்றுகொள்வது மட்டுமாக அல்லாமல் பணமில்லாத மட்டுமன்றி அட்டையில்லாத கொடுப்பனவுகளையும் தாண்டிய நவீனத்துவமான எண்மிய கொடுப்பனவு வழிமுறையின் இலகு மற்றும் பாதுகாப்பு நடைமுறைக்கு பழகிக்கொள்ளும் அனுபவத்தையும் வழங்கியுள்ளது என்று வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கையின் முதல் 100% கார்பன் பாவனையினை குறைத்த வங்கி உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் தொடர்ந்தும் 11 வருடங்களாக பட்டியலிடப்பட்ட ஒரேயொரு இலங்கை வங்கி கொமர்ஷல் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி வலையமைப்பினைக் கொண்ட 268 கிளைகள் மற்றும் 931 தானியங்கி இயந்திரங்களை கொண்டு இயங்குகின்றது. கொமர்ஷல் வங்கி இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத் துறைக்கு பாரிய கடனுதவி வழங்குவதோடு நாட்டின் வங்கித் துறையில் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் உள்ளது. வங்கியின் வெளிநாட்டு செயற்பாடுகள் பங்களாதேஷை உள்ளடக்கியதுரூபவ் அங்கு வங்கி 19 கிளைகளை இயக்குகின்றது: மியன்மார் நய் பியி தாவில் நுண்நிதி நிறுவனத்தினை கொண்டுள்ளது: மற்றும் மாலைதீவில் வங்கி பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழு அளவிலான வங்கியாக காணப்படுகின்றது.


🛒 யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணிசேவையை வழங்கி வருகிறது!!.. வருடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் வர்த்தக நிலையம் திறந்திருக்கும் tharanysupermarket.com

🌐 புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் உறவுப்பாலம் hi2world.com

🖥️ வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது lankaface.com

சிறப்புச் செய்திகள்