ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று(13) அதிகாலை மாலைதீவை சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இன்று(13) அதிகாலை 1.45 மணியளவில் அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி இன்று(13) அதிகாலை 3 மணியளவில் மாலைதீவின் தலைநகரான மாலே நகரை சென்றடைந்ததாக பிபிசி உலக சேவை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் அவரது மனைவி அயோமா ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவருடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Sri Lanka: President Gotabaya Rajapaksa flees the country on military jet BBC
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ ஜெட் விமானத்தில் நாட்டிலிருந்து புறப்பட்டு மாலைதீவின் தலைநகரான மாலேவைக்கு உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணியளவில் (22:00 GMT) தப்பியோடியுள்ளார்: பசில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றுள்ளார் – வெளிநாட்டு ஊடகங்கள்
UPDATE
கொழும்பு விமானநிலையத்திலிருந்து நான்கு பேருடன் புறப்பட தயாரான விமானத்திற்கு மாலைதீவில் தரையிறங்குவதற்கான அனுமதி கிடைக்காததால் சில மணிநேரம் குழப்பம் நிலவியதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
AFP மேலும் தெரிவித்துள்ளதாவது.
கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட அன்டொனோவ் 32 விமானத்தில் 73 வயது
கோத்தபாய ராஜபக்சவும் அவரது மனைவியும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் காணப்பட்டனர் என குடிவரவுதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களது கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் விசேட
விமானப்படை விமானத்தில் ஏறினார்கள் என இந்த நடவடிக்கைகளில் தொடர்புபட்டிருந்த குடிவரவுதுறை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மாலைதீவிற்கு செல்வதற்கான அனுமதி கிடைக்காததால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விமானம் ஓடுபாதையில் ஒரு மணிநேரத்திற்கு மேல் தரித்துநின்றது பதற்றமான நிலைமை
காணப்பட்டது இறுதியில் அனைத்தும் சரியாகவிட்டன தன்னை பெயர் குறிப்பிடவிரும்பாத விமானநிலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





