நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஜெனிவாவிற்கு தமிழர்களுக்காக குரல் கொடுக்க செல்லவில்லை அவரின் தனிபட்ட விடயங்களுக்காக சென்றுள்ளதாக காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று காலை(11) வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்ற போதே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர்கள்,
நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதை போல் நடித்தார், ஆனால் ஜெனிவா சென்று அவருக்கு பாதுகாப்பு இல்லையென்று முறையிடுகின்றார்.
பொதுமக்களுக்கான அரசியல்வாதியாக அவர் அங்கு செல்லவில்லை. தமிழ்மக்களுக்கான செயல்களை செய்யவிடாமலிக்கும் சக்தியாகவே அவரை பார்க்க வேண்டியுள்ளது என கடுமையாக சாடியுள்ளனர்.
Post Views: 408





