கடலில் நின்ற டீசல் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது

இலங்கை கடற்பரப்பில் பணம் செலுத்த முடியாமல் பல நாட்களாக நங்கூரமிட்டிருந்த 40,000 மெற்றிக் தொன் டீசல் கப்பலுக்கு நேற்று (03) பணம் வழங்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கப்பலில் இருந்து டீசல் இறக்கும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் செய்தியில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு பெற்றோல் கப்பல் மற்றும் ஒரு கப்பலுக்கான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வருட காலத்துக்கு விமான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு விநியோகஸ்தர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கூறுகிறார்.

இம்மாதம் 12ஆம் திகதிக்கும் 14ஆம் திகதிக்கும் இடையில் முதலாவது விமான எரிபொருள் கையிருப்பு இலங்கையை வந்தடைய உள்ளது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்