நாட்டிலுள்ள 16 லட்சம் அரச ஊழியர்களில், 10 லட்சம் அரச ஊழியர்களிடமிருந்து எந்தவொரு பயனும் கிடையாது என அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவிக்கின்றார்.
குருநாகல் பகுதியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரச சேவையிலுள்ள ஊழியர்களினால் விமர்சனங்கள் முன்வைக்கும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
அரசியலை போன்றே, அரச ஊழியர்களும் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
நாம் பாதாளத்திற்கு வீழ்ந்துள்ளதாக கூறிய அவர், அரச ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டால் மிக வேகமாக வளர்ச்சியடைய முடியும் எனவும் அவர் கூறுகின்றார்
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 32