புதிய சபாநாயகரின் தலை அங்கி உரியமுறையுல் பேணப்படாமை..!

இலங்கை பாராளுமன்றத்தின் சபை அமர்வுகளில் சாபாநாயகர் அணியும் தொப்பியின் (தலை அங்கி)இருமுனைகளும் தொங்கும் நிலையில் அணிவதுதான் பாராளுமன்ற மரவும், நடைமுறையும்.

ஆனால் தேசியமக்கள் சக்தி அரசால் கடந்த 21/11/2024,ல் தெரிவான
புதிய சபாநாயகர் அசோக ரன்வல அணிந்திருந்த தலை அங்கியின் இரண்டு கீழ் முனைகளும் நாடியியை மறைத்து மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் போல் அணியப்பட்டிருந்தது இது தவறான நடைமுறை.

அவருக்கு இதனை பாராளுமன்ற வழிகாட்டும் ஊழியர்கள் சொல்லிக்கொடுக்காமல் விட்டிருக்கலாம். இந்த தவறுக்கு புதிய சபாநாநகர் பொறுப்பில்லை புதியவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது பழைய பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற ஊழியர்களும் என்பது உண்மை.

-பா.அரியநேத்திரன்-

சிறப்புச் செய்திகள்