இனி 24 மணி நேரத்திற்குள் கடவுச்சீட்டு. – யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு காரியாலயம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், ஒரே நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பிக்கின்றவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதற்காக, பதிவு செய்யும் நடவடிக்கை ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6.00 மணி முதல் வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடவடிக்கை விரைவாக கடவுச்சீட்டு பெற விரும்புவோருக்காக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் கடந்த 19ம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இது குடியகல்வுத் தொடர்பான சேவைகளை விரைவாக வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான முன்னேற்றம் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்க்கப்பட்டது பாஸ்போர்ட் பிரச்சனை
பத்தரமுல்ல கடவுச்சீட்டு காரியாலயம் இப்போது திங்கள் முதல் வெள்ளி வரை 24 மணி நேரமும் சேவையில்….
ஒரு நாளுக்கு 4,000 கடவுச்சீட்டுகளை வழங்க ஏற்பாடு…
முன்னர் எடுக்கப்பட்ட முற்பதிவு திகதி எதுவாக இருந்தாலும் காலை 6 மணிக்கும் மதியம் 12 மணிக்கும் உட்பட்ட நேரத்தில் காரியாலயத்தில் மீள் பதிவு செய்வதன் ஊடாக அன்றே கடவுச்சீட்டை பெறும் வசதி…
இரவு நேரத்துக்கு புறக்கோட்டை இருந்து கடவுச்சீட்டு காரியாலயத்துக்கு விசேட பஸ் வசதிகள்…
அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் புதிய கடவுச்சீட்டு காரியாலயம்..

சிறப்புச் செய்திகள்