சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இதற்கு அமைய நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான செயற்றிட்டத்தை வெற்றிகரமான முறையில் சமர்ப்பிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. கடன் மறுசீரமைப்பு, நிலையான கடன் திட்டம் என்பன பற்றிய அறிக்கையும் உலக வங்கிக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இரண்டு நிதி நிறுவனங்கள் இது தொடர்பான திட்டங்களை வரைந்து வருவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். இந்த அறிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
இலங்கைக்கு கூடுதலாக உதவி வரும் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இணைந்து உதவி மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்யவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் பொருளாதார ரீதியான நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள நிலையில் அதில் இருந்து தப்புவதற்கு எந்தவொரு நாட்டினாலும் முடியவில்லை என்றும் பிரதமர் சட்டிக்காட்டினார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வேகம் மறை நான்கு தசம் ஐந்து சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருட இறுதியில் இதனை மறை ஒரு சதவீதமாக அதிகரிப்பது இலக்காகும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை நிலையான மட்டத்தில் பேணுவது அரசாங்கத்தின் இலக்காகும். தேசிய சொத்துக்களின் மூலம் மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதைத் தடுப்பதற்காக அவற்றை மறுசீரமைப்பது அவசியம் என்று பிரதமர் கூறினார்.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





