கலைஞர் டிவியில் கௌரி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய இரு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதை தவிர நாதஸ்வரம் சீரியல் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதில் எஸ்.வி. சேகர் கதாநாயகனாக நடித்து வரும் சீரியல் மீனாட்சி சுந்தரம். இந்த சீரியலில் நடிகை ஷோபனா கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாக துவங்கியது.
மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த மீனாட்சி சுந்தரம் சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஆம், வருகிற ஆகஸ்ட் 23 இந்த சீரியலின் கிளைமாக்ஸ் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் மீனாட்சி சுந்தரம் சீரியலை பார்த்து வந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.
Post Views: 190





