உலக அழகு ராணி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையை சேர்ந்த இஷாதி அமண்டா நேற்று (04) நாடு திரும்பினார்.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40ஆவது திருமணமான உலக அழகு ராணி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இலங்கையை சேர்ந்த இஷாதி அமண்டா நேற்று (04) நாடு திரும்பினார்.
கடந்த 30 ஆம் திகதி நடைபெற்ற இந்தப் போட்டியில் உலகெங்கிலும் உள்ள 40 நாடுகளைச் சேர்ந்த திருமணமான பெண்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், இஷாதி அமண்டாவை வரவேற்க இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடைபெற்றது.
இதேவேளை, தென்னாபிரிக்காவை சேர்ந்த பெண், திருமணமான உலக அழகி பட்டத்தை வென்றுள்ளதுடன், தாய்லாந்தை சேர்ந்த பெண் மூன்றாவது இடத்தை பிடித்தார்.



Post Views: 172