மஹிந்த ராஜபக்க்ஷவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் மூன்று பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தினால் கடிதம் மூலம் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரும் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் கூறுகையில், மஹிந்த ராஜபக்க்ஷவின் மெய்ப்பாதுகாவலர்கள் பயன்படுத்திய சில வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தமக்கு தெரிய வந்துள்ளது .
இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தலைவர் என்ற வகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ எதிர்கொள்ளக் கூடியதான அச்சுறுத்தல்களை மதிப்பிடாமல் இவ்வாறு செயற்படுவது தவறு என்றும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது