கடந்த ஜூன் மாதம் 27,937 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பான்மையான, 18,083 பேர் சொந்த வழிகளில் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம் 9,854 பேர் ஜூன் மாதத்தில் வெளிநாடு சென்றுள்ளனர்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியினுள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் மொத்த எண்ணிக்கை 56,179 என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கிறது.
இந்த வருடத்தில் இதுவரை வேலைக்காக வெளிநாடு சென்றவர்ககளில் அதிகமானோர் குவைத் நாட்டுக்கே சென்றுள்ளதாகவும், அவ்வாறு குறித்த நாட்டுக்கு 39,216 பேர் சென்றுள்ளதாகவும் அப்பணியகம் தெரிவித்துள்ளது.
இதனைவிட, கட்டாருக்கு 36,229 பேரும், சவூதி அரேபியாவுக்கு 26,098 பேரும், தென் கொரியாவுக்கு 3,219 பேரும், ஜப்பானுக்கு 2,576 பேரும் தொழிலுக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com





