நிதிசுரண்டளுக்காக இலக்கு வைக்கப்படும் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்

முன்னாள் போராளி என்ற சொல்லை சொல்ல வெக்கப்பட்டவனாக இந்த பதிவை எழுதுகின்றேன் “உண்மையில் விடுதலை போராளியாக நான் இணையும் போது எனது கழுத்தில் ஏறும் குப்பி நான் எதிரியிடம் அகப்படும் எந்த உண்மைகளும் எதிரிக்கு தெரியக்கூடாது என்பதற்காக குப்பி கடித்து வீரமரணம் அடைவேன்” என்று சத்தியம் செய்தேன்….

ஆனால் 2009ம் ஆண்டு எங்கள் விடுதலை போராட்டம் முள்ளிவாய்கள் மண்ணில் மௌனிக்கப்பட்ட போது நானும் சரணடைந்தேன்….

நேற்றய தினம்(21/12/2024) மாவீரர் போராளிகள் குடும்பம் நலன் காப்பாகம் என்னும்(நிதி சுரண்டல்) அமைப்பினால் எங்களை இராணுவத்துடன் சேர்ந்து கொன்று அழித்த EPDP கொலைகார கூட்டத்தின் சந்திரகுமார் அணியின் கூட்டதுடன் இணைந்து கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் நானும் ஓர் விடுதலை போராட்ட போராளியாக இருந்தவன் என்ற அடிப்படையில் கலந்து கொண்டேன். அப்போது தன்னை மாவீரர் போராளி குடும்பம் நலன் காப்பாக பொறுப்பாளர் என்று கூறித்திரியும் தீபன் என்பவர் தன்னை தலைவனாக காட்டி கூட்டத்தினை நாடத்தினார்.

இதில் என்ன அதிசியப்பட வேண்டிய விடயம் என்றால் மாவீரர் குடும்ப நலன்களை பேசாது இந்த வருடம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நடைபெற்றது மாவீரர் நாள் நிகழ்வு பற்றி ஒவ்வொரு பேச்சாளர்களும் விலாச தொடங்கினார்கள் அப்போதுதான் பார்த்தேன் அவர்கள் யார் என்று.
EPDP கொலைகார கூட்டத்திலிருந்து பிரிந்து வந்தாக கூறி தன்னை தமிழ் தேசியவாதியாக சித்தரித்து கிளிநொச்சி மண்ணிலே மக்காளால் தொடர்சியாக தோற்கடிக்கப்பட்ட சந்திரகுமாரின் எடுபிடிகள் எனத்தெரிந்தது.அவர்கள் அனைவரும் வளமையான பல்லவியில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனை வெளுத்து வாங்க தொடங்கினார்கள்..

உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தலைமையின் கீழ் 2016ஆம் ஆண்டு 25ஆம் தேதி காலை 07:30 மணி அளவில் 7 பேருடன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகளுக்கு களம் இறங்கும் போது வாரதவர்கள் இப்போது துயிலும் இல்லத்தின் நிலை பற்றி போசும் போது எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வந்திச்சு ..

இப்போது இவர்களுக்கு கனகபுரம் துயிலும் இல்லம் கண்ணுக்குள் குத்துகிறது என்பது தெளிவாக புலப்படுகிறது…

ஏன் என்றால் இவர்களின் நிதி சுரண்டளுக்கு கனகபுரம் துயிலும் இல்லம் முழுமையாக தேவைபடுவது என்பது இவர்களின் பேச்சு முழக்கத்தில் தெளிவாகத் தெரிந்தது….

இன்று காலை இரண்டு கால் இல்ல முன்னாள் போராளி ஒருவர் கிளிநொச்சி பொதுச் சந்தையில் வைத்து கூறினார் தம்பி இவன் தீபனுக்கு 2022ம் (“13” )பதின் மூன்று இலட்ஷம் ரூபா/= மாவீரர் நாளுக்கு வந்தாகவும் அதில் தான் கார் எடுத்து ஓடுகின்றான் என்றும் இதை விட நிறைய காசு எங்களை சாட்டி எடுக்கின்றான் என்றும் தனது மனவேதனையை கொட்டினார்….இதை விட புலம்பெயார் தேசத்தில் இருக்கும் ஈழ தேசத்து உறவுகாரன் ஒருவன் கூறும் போது தம்பி இவன் தீபன் மத்திய வங்கி கொள்ளை காரரை விட மோசமான கொள்ளைகாரன் கவனம் அப்பு இவன் எங்களிடம் மாவீரர் நாள் நான் தான் செய்வதாக கூறி நிறைய காசு வேண்டினான் என்று கூறினான்.. இதனால் தான்

இப்போது இவர்கள் இதனை முழுமையாக தாமதக்கினால் நல்ல நிதிசுரண்டல் செய்யலாம் என்ற நோக்கில் இந்த புரளி விளையாட்டை ஆரப்பித்துள்ளனர்….

அடுத்து கூட்டத்தில் EPDP சந்திரகுமாரின் மாவட்ட அமைப்பாளர் என்ற நாமத்துடன் தன்னை முன்னாள் போராளியாக அடையாளப்படுத்தும் வேங்கை போசும் போது 2025ம் ஆண்டு மாவீரர் நாள் அரசியல் சாயம் இல்லாத மாவீரர் நாளாக நாங்கள் கொண்டாவேண்டும் என்று வேடிக்கையாக கூறினார்…

அதாவது தான் இறுதி யுத்ததில் 50 மக்கள் தான் இறந்தவர்கள் என்று கிளிநொச்சி பழைய கச்சேரி முன் கொடிபிடித்த சந்திரகுமாரின் அமைப்பாளர் என்றதை மறந்து கிளுகிளுப்பாக பேசினார்…

இவர் 2016,2018,2019 ஆண்டு காலப்பகுதிகளில் நித்திரையில் இருந்தார் போல……

உண்மையில் நாட்டில் பயங்கரவாத தடை சட்டம் இன்னும் நீக்க படவில்லை என்பது இவர்களுக்கு தெரியாத இல்லை என்றால் இவர்கள் திட்டமிட்டு மாவீரர் நாளை குழப்பம் வேலைட்டமாக தான் இப்படி நாடகம் ஆடுகின்றர்களா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது…

ஏன் என்றால் கிளிநொச்சியில் நடக்கும் எந்த நிகழ்வாக இருந்தாலும் இப்போதும் இராணுவ புலனாய்வாளர்கள்,போலீஸ் புலனாய்வாளர்கள் என 10க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் ஆனால் இந்த கூட்டத்தில் ஒருவரும் இல்லை…..என்பது வியக்கதக்க விடயம்….

அடுத்து பதிவு செயப்படாத இந்த அமைப்பு இப்படி துயிலும் இல்லங்களை நோக்கி முனைப்பு காட்டுவது வேடிக்கையான விடயம் நாட்டில் அரசங்கத்தினால் பயங்கரவாத சட்டம் நடைமுறையில் இருக்கும் போது பழைய நாமத்துடன் இந்த அமைப்பை எப்படி இயக்குகின்றார்கள்… என்ற கேள்வியை எனக்குள் எழுப்பினேன்…

சாதாரணமாக ஒரு விடுதலை பாடலை கேட்டால் இரண்டு வருடம் சிறை செல்லும் நிலை இருக்கும் போது பழைய நாமத்துடன் இதனை இயக்க முனைக்கிறார்கள் என்பது சற்று சிந்திக்க வேண்டிய விடயம்…

அதாவது முன்பு இருந்தது போல இவர்களால் துயிலும் இல்லங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் இன்னும் கேள்வியை எழுப்புகின்றது…
இப்படி இவர்களின் கூட்டம் நடைபெற்றது… ஆனால் இவர்களின் பெயருக்குரிய மாவீரர் பெற்றோர் போராளிகளின் நலன் சார்ந்த எந்த விடயங்களும் போசப்படவில்லை என்பது இங்கு நடந்து.. வெறுமனே கனகபுரம் துயிலும் இல்லத்தை தாமதக்கும் குறுகிய சிந்தனையில் இந்த கூட்டத்தை நடாத்தினார்கள்… என்பது தான் நிதர்சமான உண்மை…..

2016ம் ஆண்டில் இருந்து 06 வருடங்கள் எந்த குழப்பமான நிலை இல்லாமல் மிக சிறப்பாக மக்கள்(மாவீரர் பெற்றோர்,போராளி உள்ளடங்களாக) கட்டமைப்பாக இயங்கி அனைத்து துயிலும் இல்லங்களில் சிறப்பாக நடைபெற்றது…

உலகம் அறிந்த உண்மை ஏன் உலக நாட்டு தூதரங்களின் தூதுவர்கள் வியந்த பார்த்த நிகழ்வாக இருந்தது….

இதை விட கடுமையான நெருக்கடி நிலைமைகளிலும் கடுமையான விசாரணைகளை கடந்தும் ஏன் கடந்த வருடம் பணிக்குழுவின் தலைவராக இருந்தவர் ஒரு கள்ளு தவறனை முகமையாளாராக இருந்து ஓய்வுபெற்றவர் இவர் பிறப்பில் இருந்து நீதிமன்றம் ஏறி இறங்கியதில்லை ஆனால் மூன்று தடவைகள் இந்த மாவீரர்களுக்காக நீதிமன்றம் சென்று வந்தார் இப்படியான நேரங்களில் கண்ணை மூடி கொண்டு இருந்தவர்கள் தான் இந்த வணக்க நிகழ்வை நடத்தும் இந்த பணிக்குழு கட்டமைப்பினை குழப்ப முனைப்பு காட்டுகின்றாகள் . இதை விட 2022ம் ஆண்டு பணிக்குழு தலைவராக ஒரு பாடசாலை அதிபர் இருந்தார்…

இவர் 08 மணித்தியால பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணையை முகம் கொடுத்தவர் என்றும் பலரை சொல்லி கொண்டே போகலாம் இப்படியான சூழ் நிலையில் மத்தியிலும் தங்கள் வணக்க நிகழ்வு பணிகளை செய்து முடித்தது.

இந்த பணிக்குழு. இப்படி இருக்கும் போது அரசியல் பின்புலம் இல்லாமல் இயங்கும் இந்த பணிக்குழு கட்டமைப்பை சிதைக்கும் நோக்கில் வெறும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் எதிர்ப்பை காட்டிகொண்டு இப்படியான எடுப்பிடிகளின் கையில் இந்த துயிலும் இல்லங்கள் சென்று விடக்கூடாது என்பதில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எங்கள் விடுதலைக்காக மடிந்து வீரர்களின் மாவீரர் வணக்க நிகழ்வை ஒவ்வெரு ஆண்டும் சிறப்பாக மேற்கொள்ளவேண்டும்……

-நன்றி-என்றும் உங்கள்
இசைஅமுதன்
முன்னாள் போராளி

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்