கிளிநொச்சி பெண்ணுக்கு அபுதாபியில் கிடைத்த பேரதிர்ஷ்டம்

கிளிநொச்சியிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்று அகதியாகக் காலம் கடத்திய பெண் ஒருவருக்கு அபுதாபியில் லொத்தர் சீட்டில் பெருந்தொகை பரிசு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் வசித்த அவர், திருமணத்துக்குப் பின் அபுதாபியில் வேலைக்குச் சென்றார். அங்கு வாங்கிய லொத்தர் சீட்டுக்கு ஒரு மில்லியன் அபுதாபி திர்ஹம் பெற்றுள்ளார்.

இலங்கை நாணயத்தில் எண்பத்தி இரண்டு மில்லியன் ரூபாவை பரிசாக இவ்வாறு லொத்தர் சீட்டில் வென்றுள்ளார்.

80 லொத்தர் சீட்டுகளை வாங்கிய அருள்சேகரம் செல்வராணி ஏற்கனவே விடுமுறையில் தமிழகம் வந்திருந்த நிலையில் லொத்தர் சீட்டில் வெற்றி பெற்றதாகவும், பரிசுத் தொகை குறித்து லொத்தர் நிறுவனம் தெரிவித்த தாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்