யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையிலான உத்தியோகத்தர்களுக்கான விஷேட சேவை இன்று(11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களின் கோரிக்கைக்கமைய கிளிநொச்சிக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்களுக்கும் இந்தச் சேவை மிகவும் வரப்பிரசாதமாகும்.
இச்சேவையை மாங்குளம் வரையிலோ வவுனியா வரையிலோ விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
- இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
- யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
Post Views: 95





