யாழ்ப்பாணம், கொக்குவில்: தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 இல் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி சிந்துமயூரன் பிரியங்கா கலந்து கொள்ளவுள்ளார்.
சிறுவயது முதலே இசையில் தனித்திறன் மிக்கவராகத் திகழும் பிரியங்கா, பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் தனது இனிமையான குரலால் பலரையும் கவர்ந்துள்ளார்.
அவரது இசைத் திறமையை அங்கீகரித்து, விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியில் அவரை தேர்வு செய்துள்ளது.
தற்போது போட்டியாளர்கள் தேர்வு முடிவடைந்து, விரைவில் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
பிரியங்காவின் இந்த அபார வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இலங்கை மண்ணில் இருந்து இந்தியாவின் மிகப்பெரிய இசை மேடையில் தனது திறமையை வெளிப்படுத்தவுள்ள பிரியங்காவுக்கு நாம் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.