நடிகர் விஜய் தொங்கியுள்ள ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியின் கொடி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்க புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது அவர்களிடம் பேசிய பொதுச்செயலாளர் என்.ஆனந்த் , அடுத்த வாரம் கட்சியின் கொடி அறிமுகம் செய்யப்படும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஜய், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதையும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார்.
Post Views: 203