சர்வதேச சமுதாயம் இலங்கைக்கு உதவ வேண்டும் : சோனியா காந்தி

இலங்கைக்கு சர்வதேச சமுதாயம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் நிலவும் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து காங்கிரஸ் கட்சி உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பொருளாதார நெருக்கடியால் உணவுப் பற்றாக்குறை, எரிபொருள், அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இலங்கை மக்களின் ஒருமைப்பாட்டுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்.

இலங்கை அரசு மற்றும் மக்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து உதவி வழங்கும் என நம்புகிறேன். தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து இலங்கை மீண்டு வரும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்