நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் பல பகுதிகளிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றரிலும்
அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாணத்திலும், மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி
பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்
செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Post Views: 83