2025ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் வெளிநாட்டு தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் அதிகரிப்பு!

2025ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில், வெளிநாட்டு தொழிலாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டிற்கு இருந்து தொழிலாளர்கள் அனுப்பும் வருமானம், கடந்தாண்டின் முதல் ஏழு மாதங்களுடன் ஒப்பிடும்போது 19.5 சதவீதம் அதிகமாகும்.

அதற்கமைய, கடந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 3710.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த அந்நியச் செலாவணி, இந்த ஆண்டில் 4435.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த ஜூலை மாதத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய தொகை 697 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

இது 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் பின்னர் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச தொகையாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

சிறப்புச் செய்திகள்