வரும் மாகாண சபைத் தேர்தலில் இ.தொ.கா. தனித்தும் கூட்டுச் சேர்ந்தும் போட்டி!

வரும் மாகாண சபைத் தேர்தலில் தனித்தும், கூட்டணியாகவும் களமிறங்குவது தொடர்பில் மலையகத்திலுள்ள பிரதான கட்சிகள் பரிசீலித்து வருகின்றன என்று தெரியவருகின்றது.

இதற்கமைய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் தனித்து சேவல் சின்னத்திலும் ஏனைய சில மாகாணங்களில் கூட்டுச் சேர்ந்தும் போட்டியிடுவற்குரிய சாத்தியம் பற்றி ஆராய்ந்து வருகின்றது.

எனினும், தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னர், கட்சியின் தேசிய சபைக் கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்தே களமிறங்கக்கூடும். சில மாவட்டங்களில் தனித்து போட்டியிடுவது பற்றியும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்