இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 85 வீத சிறுமிகள் காதல் என்ற பெயரில் ஏமாறுகிறார்கள்!

16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் 85 வீதமானோர் காதல் என்ற பெயரில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகுவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் அவர் கூறினார்.

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொதுமக்களுக்கு மாபெரும் பொறுப்புள்ளது. எனவே சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச்செயல்களைத் தடுக்க முயற்சி எடுப்போம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறப்புச் செய்திகள்