விலங்குளுக்கான உணவு இறக்குமதிக்காக பெருந்தொகையான நிதி செலவிடப்படுகிறது

தற்போது ஒவ்வொரு மாதமும் விலங்குளுக்கான உணவு இறக்குமதிக்காக பெருந்தொகையான நிதி செலவிடப்படுவதாக அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

உள்ளுரில் கோழிப்பண்ணை மற்றும் விலங்களுக்கான உணவுகளை உற்பத்தி செய்யப்படும் பட்சத்தில் பெருந்தொகையான அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிப்பதற்கு சிறந்த தரத்தை கொண்ட இறைச்சி வகைகள் மற்றும் முட்டைகள் தேவைப்படுகின்றன.

இந்த நிலையை தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை கோழிப்பண்ணை சங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த வருடம் உர வகைகளுக்கான தடை ஏற்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் 2 இலட்சத்து 16 ஆயிரம் மெற்றிக் டன் கோழியிறைச்சி உற்பத்தி செய்யப்பட்டது.

அத்துடன், 26.5 மெற்றிக் டன் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்