IMF உடனான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அனுமதி

இலங்கையின் தற்போதைய நிதி நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நேற்று கூடிய அமைச்சரவை தீர்மானித்ததாக அமைச்சரவை இணைப் பேச்சாளரான கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னதாக நிதியமைச்சர் நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை முன்னெடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் சாங்யோங் ரீ, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல , நிதி அமைச்சின் அதிகாரிகள் இருவரை சந்திக்கவுள்ளதாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.

கையிருப்புகளை அதிகரிக்கவும் அபிவிருத்தியை நிலையான பாதையில் கொண்டு செல்லவும் கூடிய சாத்தியமான வேலைத்திட்டம் தொடர்பாக இலங்கை ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் முறையான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IMF இன் பொருளாதாரம் பற்றிய சமீபத்திய மதிப்பாய்வு மற்றும் பெப்ரவரி பிற்பகுதியில் IMF நிர்வாக இயக்குநர்கள் கோடிட்டுக் காட்டிய மதிப்பீடுகள் பற்றிய விவரங்களை அதிகாரிகள் விவாதித்தனர்.

🇬🇧🇪🇺🇨🇦🇩🇪🇫🇷🇺🇸🇨🇭 புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் 🇱🇰இலங்கையிலுள்ள உறவுகளுக்கு பொருட்கள் கொடுக்க இலகுவழி hi2world.com

யாழில் தாரணி சூப்பர்மார்கெட் 24 மணி நேரம் திறந்து இருக்கும் என அறிவித்துள்ளார்கள்.!

🏠 தாரணி சூப்பர்மார்கெட் வீட்டில் இருந்தவாறே இலகுவாக பொருட்களைப் பெற வழி செய்கிறது. tharanysupermarket.com

📱 தொலைபேசியில் எழுத முடியாதவர்கள் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு அதை புகைப்படம் எடுத்து வாட்ஸ்சப் ஊடாக அனுப்பினால் போதும்

🛒 இலங்கையில் உள்ளவர்கள் இணையம் ஊடாகவும் (online) பொருட்களை கொள்முதல் செய்ய முடியும் lankaface.com

சிறப்புச் செய்திகள்