வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்த சட்டவிரோத மதுபான போத்தல்கள்

சட்ட சுமார் ரூ.1 கோடி பெறுமதியான மதுபான போத்தல்கள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டு வந்த வர்த்தகர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நுவரெலியா, லிதுல பிரதேசத்தில் வசிக்கும் 31 வயது வர்த்தகரான இவர் வெளிநாடுகளுக்குச் சென்று விமானம் மூலம் பல்வேறு பொருட்களை இந்நாட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று (16) காலை 5.00 மணியளவில் துபாயிலிருந்து ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் (UL-226) மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

69 மதுபான போத்தல்கள்போத்தல்களும், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2,380 சிகரெட்டுகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.

இவ்விடயம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த பயணியுடன் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்த சிகரெட் மற்றும் விஸ்கி போத்தல்களின் கையிருப்பை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறப்புச் செய்திகள்