என் மகள் அந்த துறையில் சாதிப்பாள் என நினைத்தேன் – தேவயானி பேட்டி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை தேவயானி.

1993ல் ஷாத் பஞ்சோமி என்ற பெங்காலி படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானர் 1995ல் தொட்டாச்சிணுங்கி படம் மூலம் தமிழ் திரைப்பட உலகில் கால் பதித்தார்.

அதன்பின் தொடர்ந்து படங்கள் நடித்தாலும் அஜித்துடன் அவர் நடித்த காதல் கோட்டை படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. பூமணி, சூர்யவம்சம், மறுமலர்ச்சி, தொடரும், நீ வருவாய் என, மூவேந்தர், பாட்டாளி, சமஸ்தானம், ஒருவன், தென்காசிப்பட்டணம் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொத்தன.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிப் படங்களில் நடித்துள்ளவர் ஹிந்தி மற்றும் வங்காள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். முன்னணி நாயகியாக இருந்த காலத்தில் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என 2 மகள்கள் உள்ளனர்.

தேவயானியின் மகள் இனியா, ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், ஆனால் இறுதிவரை வர முடியவில்லை.

அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை தேவயானி தனது மகள் இனியா குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், என் மூத்த மகள் நல்லா படிப்பா, நல்ல புத்திசாலி, நான் அவ டாக்டர் படிப்பாள் என நினைத்தேன். ஆனால் அவள் ரொம்ப தெளிவா நான் விஸ்காம் தான் படிப்பேன் சொன்னா.

சரி அவளுக்கு பிடித்தது படிக்கட்டும்னு நான் அவளை வர்புறுத்தவில்லை. இப்போ Photography படிக்க போறேன்னு சொல்றா, பிள்ளைகளுக்கு பிடித்த விஷயத்தை பெற்றவர்கள் செய்ய அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்