திருகோணமலை தமிழரசு மத்திய குழுவில் நடந்த விடயங்கள்! – எனக்கு சொந்த சுயபுத்தி இருக்கிறது.

நேற்றைய தினம் திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெற்றிருந்தது.

இந்த கூட்டத்தின் போது சிறீதரனின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் பல முன்மொழிவுகளை சுமந்திரன் தரப்பு நடைமுறைப்படுத்த எத்தனித்திருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எவையும் கைகூடவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட தரப்புக்கள் தெரிவித்தனர்.

பாராளுமன்ற குழு சர்வதேச தூதுவர்களுடன் சந்திப்புக்களை நடாத்தும் போது சுமந்திரனையும் அழைத்து செல்ல வேண்டும் என்று சாணக்கியன் ஒரு முன்மொழிவை கொண்டுவந்திருந்தார். ஆனால் அப்படி தேவையில்லை, பாராளுமன்ற குழுவை சர்வதேச நாடுகளின் தூதுவர்கள் அழைத்தால் பாராளுமன்ற குழு மட்டும் தான் சந்திக்க வேண்டும், அந்த குழுவிற்குள் சுமந்திரன் தேவையற்ற நபர் என கூட்டத்தில் இருந்த முக்கிய சிலரின் கருத்தாக பதிவு செய்தார்கள். இந்த விடயம் தீர்மாணம் எடுக்கப்படாமல் அப்படியே விடப்பட்டது. (மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் மக்களின் மனநிலையை புரிந்து செயற்பட வேண்டும் என்று கூட்டத்தில் பலர் பேசிக்கொண்டனர்)

அரசியலமைப்பு உருவாக்க விவகாரங்கள், அரசியல் சார் உயர் கூட்டங்களில் கட்சியின் பதில் தலைவர் என்ற வகையில் CVK சிவஞானமும், சுமந்திரனும் அழைத்து செல்லப்பட வேண்டும் என்று சுமந்திரன் தரப்பால் கோரிக்கை விடப்பட்டது. CVK சிவஞானம் கட்சி தலைவர் என்ற கோதாவில் அழைத்து செல்லப்படலாம், சுமந்திரன் என்ன அடிப்படையில் அழைக்கப்பட வேண்டும் என ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் இல்லாமல் முழித்தார்கள் சுமந்திரன் தரப்பு. அத்தோடு இந்த விடயமும் கிடப்பில் போடப்பட்டது.

பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு கவுன்சில் வராற்றில் முதலாவது தமிழ் உறுப்பினராக சிறீதரன் இந்த முறை உள்ளக தேர்தலில் வென்று தெரிவுசெய்யப்பட்டிருந்தார். அந்த கவுன்சில் இதுவரை 6 தடவைக்கு மேல் கூடி பல முக்கிய நியமனங்களை வழங்கும் முடிவை இறுதி செய்திருக்கிறது.

அந்த வரிசையில் அன்மையில் ஊழல் லஞ்ச ஆணைக்குழுவின் இயக்குனர் தெரிவின் போது இருவர் முன்னிலையில் இருந்தார்கள். அந்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட போட்டியில் சிறீதரனின் வாக்கு தீர்மானிக்கும் வாக்காக இருந்தது. அதில் தற்போது இயக்குனராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நீதிபதிக்கு சிறீதரன் தனது வாக்கை செலுத்தியிருந்தார். (குறித்த நீதிபதி அதன் ஞானசார தேரருக்கு 4 வருட கடூளிய சிறைத்தண்டனை விதித்தவர்)

இந்த விடயம் நேற்றைய மத்திய குழுவில் பேசுபொருளாக எடுக்கப்பட்டு சஜித் பிரேமதாச ஆதரவளித்தவருக்கு சிறீதரன் ஆதரவளித்திருக்க வேண்டும் என சுமந்திரனும் சயந்தனும் குத்திமுறிந்தார்கள். இதன்போது கருத்து தெரிவித்த சிறீதரன் “அரசியலமைப்பு கவுன்சில் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை நான் எடுப்பேன் நீங்கள் உங்கள் வேலைகளை மட்டும் செய்யுங்கள்” என்ற சாரப்பட்ட காட்டமான பதிலை சொன்ன போது அனைவரும் அமைதியானார்கள்.

பின் மட்டக்களப்பு துரைராஜசிங்கம் “அரசியலமைப்பு கவுன்சில் விடயங்களில் சுமந்திரனின் ஆலோசனையை பெற வேண்டும்” என கூற முற்பட, அதற்கு சிறீதரன் “எனக்கு சொந்த சுயபுத்தி இருக்கிறது என்ன முடிவு எடுக்க வேண்டும் என எனக்கு தெரியும் நீங்கள் வேண்டுமானால் அவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ளுங்கள்” என பதில் கூற துரைராஜசிங்கம் அமைதியானார்.

இப்படி பல விடயங்கள் மூலம் நேற்றைய மத்திய குழு கூட்டத்தில் சிறீதரனை எப்படியாவது கட்டுப்படுத்த வேண்டும் என்ற முன்முயற்சிகளை சுமந்திரன் தரப்பு தீவிரமாக முன்னெடுத்தது. ஆனால் அவை எவையும் பலனளிக்கவில்லை.

உண்மையில் நடந்த விடயம் இப்படி இருக்க, சுமந்திரனின் நிதி முதலீட்டில் வசந்தம் TV முன்னாள் தொகுப்பாளர் தனராஜின் தலைமையில் இயங்கிவரும் காலைமுரசு பத்திரிகையில், நடந்த விடயத்தை முற்றாக மடைமாற்றி சுமந்திரனுக்கு சார்பாக எல்லாம் நடந்தது போல இனி இது இரகசியம் இல்லை என்ற பத்தியில் வாங்கும் சம்பளத்திற்கு செம்படித்தி்ருப்பார் ஊடகவியலாளர் வித்தியாதரன் அவர்கள்.

சிறப்புச் செய்திகள்