மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் மற்றும் இராணுவத் தளபதி ஹெர்சி ஹலேவி ஆகியோர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச ரீதியிலான கைது உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்ற அச்சத்தால் இஸ்ரேலிய அதிகாரிகள் கவலையடைந்துள்ளர்.
இதேபோல் ஹமாஸ் தலைவர்களுக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கவும் சர்வதேச கோர்ட்டு ஆராயந்து வருவதாக கூறப்படுகிறது.
இதேநேரம் நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவைப் பிறப்பிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் இஸ்ரேலிய அதிகாரிகளும் இது குறித்து அமெரிக்காவுடன் பேசி வருகின்றனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை. அத்துடன் நீதிமன்றத்தில் ஒத்துழைப்பை வழங்க மறுத்துவிட்டது.