எல்லைகள் கடந்த மனிதாபிமானம்..

தேசம், எல்லைகள், மொழிகள் என நாம் ஆயிரம் பிரிவினைகளை வகுத்து வைத்திருக்கலாம். ஆனால் நடுக்கடலில் தத்தளிக்கும் ஒரு உயிருக்குத் தேவைப்படுவது தேசத்தின் வரைபடமல்ல..

“நீ பாதுகாப்பாக இருக்கிறாய்” என்ற ஒரு ஒற்றை அரவணைப்புதான்..
இன்று, ஈரானியக் கப்பலான ‘புஷேர்’ (Bushehr) பணியாளர்கள் 208 பேரின் வாழ்வில் எமது திருகோணமலை (Trincomalee) ஒரு வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது.
ஆழ்கடலில் தவித்துக் கொண்டிருந்த அந்த 208 சகோதரர்களும், திருகோணமலைத் துறைமுகத்தின் மண்ணைத் தொடும் அந்த நிமிடம்… அது வெறும் தரை இறக்கம் அல்ல..

பல மைல் தொலைவில் உள்ள அவர்களின் தாய்மார்கள், மனைவிகள் மற்றும் குழந்தைகளின் கண்ணீருக்குக் கிடைத்த பதில்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்ற முதுமொழிக்கேற்ப சர்வதேச அரசியல் அழுத்தங்களைக் கடந்து, அந்தப் பணியாளர்களை எமது மண்ணிற்கு அழைத்து வரத் துணிந்த நம் இலங்கை ஜனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்களின் மனிதாபிமான நடவடிக்கை நெஞ்சை நெகிழச் செய்கிறது.

புயல் வீசும் சர்வதேச அரசியலுக்கு மத்தியில், “உயிரே மேலானது” என நிலைநிறுத்திய இலங்கை அரசாங்கத்திற்கும், பாதுகாப்புப் படையினருக்கும் Salutes..

இலங்கை என்பது வெறும் ஒரு தீவு மட்டுமல்ல, அது துயரத்தில் இருப்பவர்களுக்குத் தஞ்சம் கொடுக்கும் ஒரு தர்ம பூமி என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிரூபித்துள்ளோம்.

எமது மண்ணில் கால்பதிக்கும் அந்த 208 ஈரானிய உறவுகளும் விரைவில் தங்களது தாயகம் திரும்பி, தங்கள் அன்புக்குரியவர்களைக் கட்டித்தழுவட்டும். அவர்கள் சுமந்து செல்லும் நினைவுகளில் இலங்கை மக்களின் அன்பும், திருகோணமலை மண்ணின் ஈரமும் என்றும் நீங்காமல் இருக்கட்டும்.

மனிதாபிமானம் எல்லைகளைக் கடந்து வெல்லட்டும்..

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்