இன்றைய தங்கத்தின் விலை

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 638,635 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில தினங்களை விட இன்று தங்கத்தின் விலையில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய தங்க நிலவரம்

இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,250 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் கடந்த மாதம் 30ஆம் திகதி 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 170,000 ரூபாவாகவும், நேற்று முன்தினம் (04) 168,850 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 157,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதிர்ந்து போயுள்ள முதலீட்டு உலகம்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து முதலீட்டு உலகம் அதிர்ந்து போயுள்ளது.

ஆனாலும், கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி அடைந்துள்ளது.

புவி அரசியல் பிரச்சனை காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக திறனாய்வாளர்கள் கூறினாலும், அதையும் கடந்து வேறு சில காரணங்களும் தங்கத்தின் விலையில் தாக்கம் செலுத்திவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்