12 அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளது

ஜப்பானிய சர்வதேச நிதியமான ஜெய்க்கா, இலங்கையில் நிதியளித்து வந்த 12 திட்டங்களுக்கான தமது நிதியளிப்பை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக, அந்த நிதியம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த இரண்டாவது முனைய விஸ்தரிப்புக்காக ஜப்பானிய தாய்சேய் நிறுவனத்துக்கான நிதியை ஜெய்க்கா நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஜப்பானின் 12 திட்டங்களுக்கான நிதியை ரத்துச்செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை, சர்வதேச நாடுகளில் இருந்து பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தப்போவதில்லை என்று அறிவித்திருந்த நிலையிலேயே ஜெய்க்கா நிறுவனம், இந்த தீர்மானத்தை எடுத்ததாகவும் எனினும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டுக்கு வரும் வரையிலேயே இந்த நிதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ஜெய்க்கா நிதியம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்