அமைச்சர்கள் நால்வர் இராஜினாமா

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக தம்மிக்க பெரேரா அறிவித்துள்ளார்.

பந்துல குணவர்தன, மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

சர்வ கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு இடமளித்து, தாம் இதுவரை வகித்த போக்குவரத்து, ஊடக, மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு பதவியை இராஜினாமா செய்து, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பந்துல குணவர்தன தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.

இதேவேளை, சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக ஹரின் பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்