வெளிநாட்டில் உள்ளோர் டொலர் செலுத்தி எரிவாயு பெறலாம்

கைப்பேசி செயலியின் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்கள் லிட்ரோ எரிவாயுவை இலங்கையிலுள்ள தங்களது உறவினர்களுக்கு டொலரில் கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ், வீடுகளுக்கே எரிவாயுவை விநியோகிக்கும் நடவடிக்கையை மீண்டும் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டார்.

இதனூடாக எந்தவொரு நபருக்கும் இதற்கான செயலி ஊடாக கட்டணத்தை செலுத்தி தங்களது வீடுகளுக்கே எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியும்.

அடுத்த வாரம் முதல் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வாக இது அமையும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாளை நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 100 முதல் 200 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com
சிறப்புச் செய்திகள்