இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றின் மிகப்பெரிய பணப்பரிசை வென்ற நபருக்கு அதற்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
474,599,422 ரூபாய் மெகா சூப்பர் பரிசு வெற்றவருக்கான காசோலையை தேசிய லொத்தர் சபை நேற்று வழங்கி வைத்தது.
வெற்றி பெற்ற லொத்தர் சீட்டை கொகரெல்ல பகுதியை சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார்.
இலங்கை லொத்தர் சீட்டிழுப்பு வரலாற்றில் இதுவரை வென்ற மிகப்பெரிய சூப்பர் பரிசு இதுவாகும்.
இதேவேளை, முன்னதாக லொத்தர் வரலாற்றில் மிகப்பெரிய பரிசாக 230 மில்லியன் ரூபாய் பரிசு வெல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 194