வெளிநாட்டுக் கடன்கள் ஊடான அழுத்தங்கள் குறைக்கப்படும் போது, நாட்டின் வங்கிச் செயற்பாடுகளை இலகுபடுத்த முடியும் எனவும், ஃபிட்ச் ரேட்டிங்க் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வங்கிச் செயற்பாடுகள் கடந்த பொருளாதார நெருக்கடிக் காலத்தில் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகி இருந்தன.
எனினும் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் விளைவாக அந்தச் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் விளைவால் ஏற்படுகின்ற இறையாண்மை அழுத்தக் குறைப்பின் காரணமாக, வங்கிகளின் செயற்பாட்டுச் சூழ்நிலை இலகுபடுத்தப்படும்.
பேரண்ட பொருளாதாரத்தின் முன்னேற்றமான சூழல் மற்றும் நிதியியல் மறுசீரமைப்பு என்பன, வங்கிகளின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் மேலும் ஸ்திரப்படுத்துவன.
எவ்வாறாயினும், தற்போது வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள சாதக நிலைமையின் ஸ்திரத்தன்மை, கடன்மறுசீரமைப்பில் எட்டப்பட்ட ஒழுக்கங்களைத் தொடர்ந்து பேணுவதிலேயே தங்கியுள்ளது எனவும் ஃபிட்ச் ரேட்டிங்க் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.