தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சாய்பல்லவி. சிவகார்த்திகேயனுடன் அவர் இணைந்து நடித்த அமரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் தற்போது இந்தி மொழியில் உருவாகும் ராமாயணம் படத்தில் நடிகை சாய்பல்லவி சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா மட்டுமன்றி தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் நடித்துக்கொண்டிருக்கும் சாய் பல்லவி, குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.
இந்தநிலையில் சாய்பல்லவி நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்துக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போலி புகைப்படக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொந்தளித்து பதிவிட்டுள்ளனர்.
சமீப காலமாக ராஷ்மிகா உட்பட பல நடிகைகளின் புகைப்படங்கள் வீடியோக்கள், போலியாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சாய்பல்லவி புகைப்படங்களும் போலியாக வெளியிடப்பட்டுள்ளமை திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





