சமையல் எரிவாயு விலைக்குறைக்கப்பட்டாலும், உணவுகளின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 10 வீதம் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க எமக்கு முடியும். அவ்வாறு செய்தால், எரிவாயு விலை குறைக்கப்பட்டு மறுபுறத்தில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கிறது.

எனவே, உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்கவும் முடியாமல், குறைக்கவும் முடியாமல் பாரிய பிரச்சினை ஏற்படுகிறது. மரக்கறி ரொட்டி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முட்டை ரொட்டி, பராட்டா என்பனவும் 10, 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தாங்கள் கூறி அதிகரிக்கப்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்து, ஒழுங்குபடுத்தலை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறு செய்தால், எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துடனும் இணங்க தாங்கள் தயார் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலை குறைக்கப்படுவதால், எந்த வகையிலும் உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட மாட்டாது.

ஏனெனில், முன்னதாக எரிவாயு விலை குறைக்கப்பட்டபோது, தேநீரை 30 ரூபாவாகவும், உணவுப் பொதியை 10 வீதத்தாலும் குறைப்பதாக கூறினோம்.

ஆனால், புறக்கோட்டையில் உள்ள பொருட்களின் விலை கிராமத்திலும் இருக்க வேண்டும். அது இன்னும் நடைமுறையாகவில்லை.

புறக்கோட்டையில், 410 ரூபாவுக்கு விற்பனையாகும் ஒரு கிலோகிராம் பருப்பு, கிராமத்தில் 600 ரூபாவுக்கு விற்பனையாகிறது. கால் இறாத்தல் பாணும், பருப்பு கறியும் 180 ரூபாவுக்கும், அரை இறாத்தல் பாணும், பருப்பு கறியும் 250 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை 60 ரூபாவுக்கும், 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டிருந்தன. எனவே, எரிவாயு விலை குறைக்கப்படுவதால், உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்க முடியாது என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com