செருப்பைக் கழட்டி அடித்தாலும் சிரித்துக் கொண்டே எழுந்து நிற்பேன்..

பிக் பாஸ் தமிழ் சீசன் 8இன் டாப் 6 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவர் முத்துக்குமரன். முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மனதை வென்ற போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் முத்துக்குமரன், டைட்டிலை வெல்லுவாரா இல்லையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். இப்படியான சூழலில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற, மாகபா ஆனந்த் டாப் 6 போட்டியாளர்களை பேட்டி எடுத்தார். அதில் முத்துக்குமரனைப் பேட்டி எடுக்கும்போது, அவர் கூறிய பலவிஷயங்கள் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது

குறிப்பாக அவர் பேசும்போது, ” இந்த சீசனில்தான் பேச்சாளர்கள் போட்டியாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் பேச்சாளராக இருந்தால் இந்தப் போட்டியில் நீடித்து விடமுடியுமா என்றால் அது கிடையாது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டுப் போன மஞ்சரி ஒரு பேச்சாளர். நானும் பேச்சாளர்தான். நாம் பேசுவது மக்களுக்குப் பிடித்திருந்தால்தான் நாம் வீட்டிற்குள் இருக்க முடியும்.
பேச்சாளர்கள்: இப்போது 6 போட்டியாளர்கள் உள்ளோம். இந்த 6 போட்டியாளர்களில், நான் மட்டும்தான் பேச்சாளர். சௌந்தர்யா பேச்சாளர் கிடையாது. ஆனால் சௌந்தர்யா பேசுவது அழகாக உள்ளதால் மக்களுக்கு பிடித்துள்ளது. இந்த வீட்டில் உள்ள போட்டியாளர்களில் யாருடைய மண்டையையும் கழுவ முடியாது. நான் சொல்வது சரி என அவர்கள் ஏற்றுக்கொண்டு இருக்கலாம். ஒருவரின் மண்டையைக் கழுவினால், அதனால் எந்த பயனும் இல்லை.

அறிவுரை: போட்டி தொடங்கிய முதல் வாரத்தில் தர்ஷிகா என்னை அழைத்து, முத்துக்குமரா நீ பேசறது ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலை உண்டு செய்கின்றது எனக் கூறினார். அதன் பின்னர் மஞ்சரி வந்த பின்னர், எதிரில் இருப்பவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்பதைக் கேட்டுவிட்டுப் பேசு எனக் கூறியுள்ளார். ஆனந்தி சொல்லும்போது, ‘ ஒருவருடன் பேசும்போது எப்படி அமர்ந்துள்ளோம், நமது உடல் மொழி எப்படி உள்ளது என கவனிக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்கள். சாச்சனா எனக்கு சில விஷயங்களைக் கூறியுள்ளார். தீபக் அண்ணன் எனது கையை பிடித்து பொறுமையாக இருக்கச் சொல்லியுள்ளார

செருப்பைக் கழட்டி: என்னை யாராலும் எதுவும் செய்துவிட முடியாது. என்னை யாராலும் உடைத்து விட முடியாது. எல்லோரும் அடிபட்டு அடிபட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். என்னை எந்த நிகழ்வுமே உடைத்துவிட முடியாது. என்னை நீங்கள் செருப்பைக் கழட்டி அடித்தாலும், சிரித்துக் கொண்டே எழுந்து நிற்பேன். ஆனால் என்னை நானே உடைத்துக் கொண்டேன் என்றால் என்னால் எழுந்து நிற்கவே முடியாது. ஆனால் இன்று வரை இந்த வீட்டில் எனக்கு அப்படியொரு சூழல் ஏற்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

சிறப்புச் செய்திகள்