டிக்டோக்கிற்கு தடை விதித்த ஐரோப்பிய நாடு ஒன்று!

சிறுவர்கள் மீதான சமூக ஊடகங்கள் தாக்கம் குறித்த அச்சத்துக்கு மத்தியில் அல்பேனிய அரசாங்கம் பிரபல வீடியோ செயலியான டிக்டோக்கிற்கு ஓராண்டு தடை விதித்துள்ளது.

கடந்த நவம்பரில் சமூக ஊடக முரண்பாட்டினால் வயது பாடசாலை மாணவன் ஒருவனை அவரது சக வகுப்புத் தோழி கத்தியால் குறித்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு தழுவிய எதிர்ப்பு மற்றும் அரசாங்க அமைதியின்மைக்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உத்தேச தடை உத்தரவானது 2025 ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் என்று அல்பேனிய பிரதமர் எடி ராமா (Edi Rama) சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூக ஊடகங்கள் குறிப்பாக டிக்டோக், நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் வன்முறையை வளர்த்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

முன்மொழியப்பட்ட தடை குறித்து அல்பேனிய அரசாங்கத்திடம் இருந்து அவசர விளக்கங்களை கோரி வருவதாக டிக்டோக் தெரிவித்துள்ளது.

சிறப்புச் செய்திகள்