மின்சாரம், எரிபொருள், சுகாதாரம்.. அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

மூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசியமான பொதுச் சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டின் எண்.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சார வழங்கல், பெற்றோலியப் பொருட்கள் மற்றும் எரிபொருளின் விநியோகம் மற்றும் அனைத்து சேவைகள், வேலைகள் அல்லது உழைப்பு, பராமரிப்பு மற்றும் வரவேற்பு தொடர்பாக தேவையான அல்லது செய்ய வேண்டிய விவரங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் உள்ள நோயாளிகளின் பராமரிப்பு உணவு மற்றும் சிகிச்சை, அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

  • புலத்தையும் நிலத்தையும் இணைக்கும் மாபெரும் ஆன்லைன் ஷாப்பிங் Hi2world.com
  • இலங்கையில் இணையம் ஊடாக பொருட்களை கொள்முதல் செய்ய lankaface.com
  • யாழில் “தாரணி சூப்பர்மார்கெட்” 24 மணி நேர சேவை tharanysupermarket.com

உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp
குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்

சிறப்புச் செய்திகள்